கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக வீரர் டி.குகேஷ்

டி.குகேஷ்
டி.குகேஷ்
Updated on
1 min read

டொரண்டோ: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற 14-வது சுற்று ஆட்டத்தில் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார். அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in