

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்களில் குஜராத் அணி சுருண்டது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் விக்கெட்டானார்.
அடுத்து விருத்திமான் சாஹா 2 ரன்களில் போல்டானார். 5வது ஓவரில் சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட். அதே ஓவரில் டேவிட் மில்லர் விக்கெட். இப்படியாக முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்டை தாரைவார்த்த குஜராத் 30 ரன்களைச் சேர்த்தது. 6ஆவது ஓவர் மெய்டன்.
அபினவ் மனோகர் 8 ரன்கள், ஷாருக்கான் டக் அவுட் என 9 ஆவது ஓவரில் 2 விக்கெட். இப்படியான ஒரே ஓவரில் 2 விக்கெட் என்பது சாதாரணமாக வீழ்ந்தது. ராகுல் டெவாட்டியா 10 ரன்களுக்கு எல்பிடபள்யூ.
இந்த ஐபிஎல் தொடரின் மிக மோசமான ஆட்டமாக இது அமைந்தது. இதற்கு ஒரு என்டே இல்லையா என்பது போல மோஹித் சர்மா 2 ரன்களுக்கு அவுட்டானதும் 15 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்தது 78 ரன்களைச் சேர்த்திருந்து குஜராத்.
ஆட்டத்தின் முதல் சிக்சரே 17ஆவது ஓவரில் தான் விளாசப்பட்டது. ரஷீத்கான் மட்டும் நின்று ஆடினார். ஆனால் அவரும் 17வது ஓவரில் அவுட்டாக, அதே ஓவரில் நூர் அகமது 1 ரன்னுக்கு அவுட்டாக ஆட்டம் க்ளோஸ்!. நிர்ணயாக்கிப்பட்ட 20 ஓவரில் 89 ரன்களில் சுருண்டது குஜராத்.
டெல்லி அணி தரப்பில்,முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆளுக்கு 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.