Published : 10 Apr 2018 05:17 PM
Last Updated : 10 Apr 2018 05:17 PM

கோலி தலைமை ஆர்சிபி அணி ஒரு ‘ஜோக்’;கமெண்ட் அடித்த இங்கிலாந்து வீரர்: காய்ச்சி எடுத்த நெட்டிசன்ஸ்

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு கடவுள் என்பதை விட கிரிக்கெட் ஆளுமைகளை கடவுளாக வழிபடும் ரசிகர் வழிபாட்டுக் கூட்டம் உள்ளதாகவே கருத முடியும். இந்நிலையில் தங்கள் ஆளுமைகள் நிரம்பிய ஆர்சிபி அணியை ஜோக் என்று கூறினால் விட்டு விடுவார்களா சமூகவலைப் பதிவர்கள். மாட்டிக் கொண்டார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்.

"RCB's team is a joke #IPL", என்று கோலி தலைமை சூப்பர்ஸ்டார்கள் நிரம்பிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜோக் என்று வர்ணித்துள்ளார் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்.

அவ்வளவு பெரிய வீர்ர்களை வைத்துக் கொண்டு அன்று கொல்கத்தாவிடம் தோல்வி கண்டதையடுத்து அவர் இவ்வாறு கூறினாரா என்பது தெரியவில்லை.

ட்விட்டர் போட்டு முடித்து கையை எடுத்திருப்பாரோ இல்லையோ ரசிகர்கள் பென் டக்கெட்டை காய்ச்சி எடுத்துள்ளனர். ஆனால் பெரிய வீரர்கள் கொண்ட அணியை புகழ்ந்து கூறுவதற்காகவே ஜோக் என்று கூறியதாக அவர் பிற்பாடு திருத்தினாலும் ரசிகர்கள் திருப்தியடையவில்லை.

இதோ அவரை காய்ச்சி எடுத்த சில வாசகங்கள்:

“இங்கிலாந்து ஒரு தேநீர் கோப்பையாவது வென்றுள்ளதா?”

“எந்த அணி 263, 248, 235 ரன்களை எடுத்தது?”

“உங்கள் ஒரு நாள் அணி போல்...உலகக்கோப்பையை வென்றிருக்கிறீர்களா?”

“நீங்கள்தான் ஜோக் ப்ரோ, பக்குவமடையுங்கள் கிரேட் பிளேயர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளூங்கள். ஏனெனில் நீங்கள் கிரேட் ப்ளேயர் அல்ல”

“ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 ஆண்டுகளாக ஆர்சிபி ஆடிவருகிறது. உங்களால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட ஆட முடியவில்லை. உங்கள் ‘ஷிட்லேண்ட்’ க்குக் கூட நீங்கள் 11 ஆட்டங்களில் ஆடியதில்லை. யார் ஜோக்”

என்று அவரை பின்னி எடுத்து விட்டார்கள். உடனேயே அவர் மன்னிப்புக் கோரும் விதமாக அந்தர் பல்டி அடித்து, “பயங்கரமான வசைகளுடன் விழித்தேன். ஆர்சிபியை ஜோக் என்றேன் அதாவது டி காக், டிவில்லியர்ஸ், மெக்கல்லம் மற்றும் பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளதைத்தான் நல்ல அணி என்பதை அவ்வாறு குறிப்பிட்டேன். எனக்கு எதிராக எழுந்த பதிவுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x