Published : 28 Apr 2018 07:37 am

Updated : 28 Apr 2018 07:37 am

 

Published : 28 Apr 2018 07:37 AM
Last Updated : 28 Apr 2018 07:37 AM

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி; சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 5-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ சோங் வேயியை எதிர்த்து விளையாடினார்.


வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான லீ சோங் வேய் 21-12, 21-15 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் லீ சோங் வேய், ஜப்பானின் கென்டோ மோடாவை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-15, 21-13 என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் லீ ஜாங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் சாய்னா நெவால், தைவானின் தாய் சூ யிங் அல்லது சீனாவின் ஹீ பிங்ஜியோவோவுடன் மோதக்கூடும். மற்றொரு கால் இறுதியில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 7-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சன் ஜி ஹூனை எதிர்த்து விளையாடினார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 19-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். - ஏஎப்பி


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x