கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 8-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி

விதித் குஜராத்தி மற்றும் டி.குகேஷ்
விதித் குஜராத்தி மற்றும் டி.குகேஷ்
Updated on
1 min read

டொரண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 8-வது சுற்றில் இந்திய வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார்.

பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 8-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், சக நாட்டு வீரரான விதித் குஜராத்தியுடன் விளையாடினார். இந்த ஆட்டத்தில் 38-வது நகர்த்தலின்போது குகேஷ் வெற்றி பெற்றார்.

ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ் ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா, சக நாட்டைச் சேர்ந்த வீரரான ஃபேபியானோ கருனாவை வீழ்த்தினார்.

மற்றொரு இந்திய வீரர் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதிய ஆட் டம் டிராவில் முடிந்தது. 8 சுற்றுகளின் முடிவில் குகேஷ், இயன் நெபோம்னியாச்சி ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிரக்ஞானந்தா, ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஃபேபியானோ கருனா 4, விதித் குஜராத்தி 3.5, அலிரேசா ஃபிரோஸ்ஜா 3, நிஜாத் அபாசோவ் 2.5 புள்ளிகளுடன் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.

கொனேரு ஹம்பி வெற்றி: மகளிர் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, சக நாட்டு வீராங்கனையான ஆர்.வைஷாலியை வீழ்த்தினார். கொனேரு ஹம்பி 3.5 புள்ளிகளுடனும், வைஷாலி 2.5 புள்ளிகளுடனும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in