Published : 12 Apr 2024 04:35 AM
Last Updated : 12 Apr 2024 04:35 AM

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் | பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி வெற்றி

டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 45-வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 40-வது காய் நகர்த்தலின்போது பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.

இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா மோதிய ஆட்டம்40-வது காய் நகர்த்தலின்போதுடிராவில் முடிவடைந்தது. ரஷ்யகிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டமும் 41-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

6 சுற்றுகளின் முடிவில் குகேஷ், இயன் நெபோம்னியாச்சி ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பிரக்ஞானந்தா, ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா3.5 புள்ளிகளுடனும் விதித் குஜராத்தி, ஹிகாரு நகமுரா ஆகியோர்தலா 3 புள்ளிகளுடனும் நிஜாத் அபாசோவ், அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடனும் உள்ளனர்.

மகளிர் பிரிவு 6-வது சுற்றில்இந்தியாவின் ஆர்.வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரீனா லக்னோவுடன் மோதினார். இதில் 29-வது காய் நகர்த்தலின்போது கேத்ரீனா வெற்றி பெற்றார். மற்றொரு இந்தியவீராங்கனையான கொனேரு ஹம்பி 48-வது காய் நகர்த்தலின் போது சீனாவின் லீ டிங்ஜியிடம் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x