PBKS vs SRH | இரண்டு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி!

PBKS vs SRH | இரண்டு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி!
Updated on
1 min read

முலான்பூர்: பஞ்சாப் மாநிலத்தின் முலான்பூர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி.

நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (ஏப்ரல் 09) விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய 4-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் ஹெட். அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் மார்க்ரம் வெளியேறினார். அடுத்த ஓவரில் 16 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மாவை வெளியேற்றினார் சாம் கரன்.

அடுத்து இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி ஐந்து சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகள் என 64 ரன்கள் விளாசினார். தொடர்ந்து ராகுல் திரிபாதி 11 ரன்கள், ஹெய்ன்ரிச் கிளாசன் 9 ரன்கள், அப்துல் சமாது 25, ஷஹ்பாஸ் அஹமது 14, பேட் கம்மின்ஸ் 3, புவனேஸ்வர் குமார் 6, ஜெயதேவ் உனட்கட் 6 என மொத்தம் 20 ஓவர் முடிவில் 182 ரன்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்திருந்தது.

அடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனரான ஷிகர் தவான் 14 ரன்கள் எடுத்து பின்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இன்னொரு புறம் ஒரு ரன் கூட எடுக்காமல் மூன்றாவது பந்திலேயே வெளியேறினார்.

பிரப்சிம்ரன் சிங் 4 ரன்கள், சாம் குரன் 29 ரன்கள், சிக்கந்தர் ரஸா 28, ஷஷாங்க் சிங் 46, ஜிதேஷ் சர்மா 19, அஷுடோஷ் 33 என 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in