Published : 09 Apr 2024 07:47 AM
Last Updated : 09 Apr 2024 07:47 AM
டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ளடொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வதுசுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இந்த ஆட்டம் 24-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொருஇந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி தனது 4-வதுசுற்றில் ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இதில் 44-வது காய் நகர்த்தலின் போது விதித் குஜராத் தோல்வியை சந்தித்தார்.
அதேவேளையில் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனாவுக்கு எதிரான ஆட்டத்தை 74-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்டம் 64-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
4 சுற்றுகளின் முடிவில் இயன் நெபோம்னியாச்சி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டி.குகேஷ், ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 2.5 புள்ளிகளை பெற்றுள்ளனர். பிரக்ஞானந்தா 2 புள்ளிகளுடன் உள்ளார். விதித் குஜராத்தி, அலிரேசா ஃபிரோஸ்ஜா, நிஜாத் அபாசோவ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 1.5 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
வைஷாலி: மகளிர் பிரிவு 4-வது சுற்றில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு இந்திய வீராங்கனையான கொனேரு ஹம்பி, பல்கேரியாவின் நூர்கியுல் சலிமோவாவுடன் மோதினார். இதில் கொனேரு ஹம்பி 62-வது காய்நகர்த்தலின் போது தோல்வியை சந்தித்தார். 4 சுற்றுகளின் முடிவில் வைஷாலி 2 புள்ளிகளையும், கொனேரு ஹம்பி 1.5 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT