Published : 08 Apr 2024 06:18 AM
Last Updated : 08 Apr 2024 06:18 AM

ஹாக்கி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

பெர்த்: ஹாக்கி டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம், இந்திய ஆடவர் அணி தோல்வி கண்டது.

ஆஸ்திரேலியாவில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஹாக்கி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணிக்காக ஹேவர்ட் 2், ஜேக்கப், எப்ராம்ஸ்ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x