Published : 06 Apr 2024 07:45 AM
Last Updated : 06 Apr 2024 07:45 AM

பொறியியல் கல்லூரி கிரிக்கெட்: எஸ்ஆர்எம் அணி சாம்பியன்

சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கிரிக்கெட் தொடர் கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெற்றது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று லயோலா - எஸ்ஆர்எம் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த எஸ்ஆர்எம் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. ஓம் நித்தின் 97, நீல் ராய் 42 ரன்கள் விளாசினர். 147 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லயோலா அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக பிரவீன் 35, அனிருதன் 28 ரன்கள் சேர்த்தனர். எஸ்ஆர்எம் அணி தரப்பில் அக்சத் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்ஆர்எம் அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ஆர்எம்கே கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் கோப்பையை வழங்கினார். 3-வது இடத்தை எஸ்விசிஇ கல்லூரியும், 4-வது இடத்தை சவீதா பல்கலைக்கழகமும் பிடித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x