Published : 03 Apr 2024 08:47 AM
Last Updated : 03 Apr 2024 08:47 AM

ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக ஷைனி வில்சன் நியமனம்

ஷைனி வில்சன்

சென்னை; இந்திய உணவுக்கழகத்தின் மண்டல பொது மேலாளரும், முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையுமான ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2024 முதல் 2028 வரை நான்கு ஆண்டு காலத்திற்கு உரியதாகும்.

இந்த நியமனத்திற்கான ஆசிய விளையாட்டு ஆணையத்தின் கூட்டம் நேற்று இணைய வழியாக ஆணையத்தின் தலைவரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான முகமத் சுலைமான் தலைமையில் நடைபெற்றது.ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆணைய உறுப்பினர்களில் ஒருவராக ஷைனி வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஷைனி வில்சன், நான்குமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர். 1984-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 4x400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றிருந்தார்.

1986-ம் ஆண்டு சியோல் நகரில்நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் பிரிவில்தங்கம் வென்றுள்ளார். இதேபோல், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய ஃபெடரேஷன் போட்டிகள் ஆகியவற்றில் பல ஆண்டுகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.

மத்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விருது வழங்கி இவர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x