RCB vs KKR | பெங்களூருவை பந்தாடிய நரைன், வெங்கடேஷ் ஐயர்: கொல்கத்தாவுக்கு 2-வது வெற்றி

கொல்கத்தா அணி வீரர்கள்
கொல்கத்தா அணி வீரர்கள்
Updated on
1 min read

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 10-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் சொந்த மைதானத்தில் (ஹோம் கிரவுண்ட்) நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவிய முதல் அணியாக ஆர்சிபி உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒன்பது போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடி அணிகள் வெற்றி பெற்றிருந்தது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தில் வேகத்தை குறைத்து வீசி பெங்களூரு பேட்டர்களை திணறடித்தனர். கோலி 83 ரன்கள் எடுத்தார். கிரீன் 33, மேக்ஸ்வெல் 28 மற்றும் தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்திருந்தனர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரட்டியது. பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் இணைந்து கொல்கத்தாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பவர்பிளே ஓவர்களில் ஆர்சிபி பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து திசைக்கும் தெறித்து செல்லும் வகையில் துவம்சம் செய்தனர்.

இதில் சுனில் நரைனின் பங்கு அதிகம் இருந்தது. 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆர்சிபியை அவர் அப்செட் செய்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 86 ரன்கள் எடுத்த நிலையில் நரைன் ஆட்டமிழந்தார். 30 ரன்கள் எடுத்து சால்ட் வெளியேறினர்.

பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்து இலக்கை விரட்டினர். வெங்கடேஷ் ஐயர், 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ், 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். ரிங்கு, 5 ரன்கள் ஸ்கோர் செய்தார். 16.6 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கேகேஆர்.

பெங்களூரு அணி பவுலர்களில் சிராஜ், யஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப் அதிக ரன்களை லீக் செய்திருந்தனர். வைஷாக், 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றி இருந்தார். மயங்க் தாகர், 2.5 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்திருந்தார். கிரீன், 1 ஓவரில் 7 ரன்கள் கொடுத்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in