பிஜாய் சேத்ரி
பிஜாய் சேத்ரி

உருகுவே கிளப்புக்காக பிஜாய் சேத்ரி ஒப்பந்தம்

Published on

சென்னை: இந்திய கால்பந்து வீரரான பிஜாய் சேத்ரி உருகுவே நாட்டில் உள்ள காலன் எப்சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் லத்தின் அமெரிக்கா கிளப்பில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் டிபன்டரான பிஜாய் சேத்ரி.

22 வயதான பிஜாய் சேத்ரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.2016-ம் ஆண்டு ஷில்லாங் லஜோங் அணியில் இருந்து தனது கால்பந்து பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் 2018-ம் ஆண்டு இந்தியன் ஏரோஸ் அணியில் இணைந்தார். தொடர்ந்து சென்னை சிட்டி, ரியல் காஷ்மீர், ஸ்ரீநிதி டெக்கான் அணிகளுக்காக விளையாடினார். இந்த சீசனில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியில் இணைந்திருந்தார்.

காலன் எப்சி, உருகுவே நாட்டின் தலைநகரான மான்டிவீடியோவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கிளப் உருகுவேவில் உள்ள 2-வது டிவிஷனில் விளையாடி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in