

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் முகமது ஷோஹிபுல், ஃபிக்ரி மற்றும் பாகஸ் மவுலானா ஜோடியுடன் மோதியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 16-21,15-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.