“தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர்!” - டி வில்லியர்ஸ் புகழாரம்

“தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர்!” - டி வில்லியர்ஸ் புகழாரம்
Updated on
1 min read

மும்பை: "தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதுபோல் தோனியும் இருக்கிறார்" என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் புகழ்ந்துள்ளார்.

டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் தோனி குறித்து பேசுகையில், "தோனிக்கு இது இறுதி சீசனாக இருக்குமா... யாருக்கும் அது தெரியாது. தோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறதோ அதுபோல் தோனியும் தொடர்ந்து இயங்குகிறார். என்ன ஓர் அற்புதமான வீரர், என்ன ஓர் அற்புதமான கேப்டன்.

சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய சக்தி என்றால் மூத்த வீரர்கள் தான். சொல்லப்போனால் வயதான வீரர்கள் தான் அவர்களின் பலமே என்று நான் நம்புகிறேன். தோனி தலைமையில் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் அமைதியான பயிற்சியின் கீழ், ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் இந்த கலாச்சாரத்தை உயிர்ப்பித்து வைத்துள்ளனர்.

சிஎஸ்கே மிகவும் அச்சுறுத்தும் அணி. அவர்களை வீழ்த்துவது ஒருபோதும் எளிதல்ல. அவர்களின் யூனிட்டே வெற்றிகரமானது" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in