

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது 34 வது சதம் கண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுடன ஒரு நாள் தொடரில் கொலி அடித்த இரண்டாவது சதம் இதுவாகும்.
கேப்டவுன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 34வது சதத்தை விளாசினார். கோலியின் சதத்தின் உதவியுடன் இந்திய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 303 ரன்கள் குவித்தது, அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 3 -0 என்று முன்னிலை வகிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சச்சின், வார்னே, லஷ்மன் உள்ளிட வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரெய்னா: இந்தியாவுடைய ரன் மிஷின் மீண்டும் சதம். என்ன ஒரு வீரர்
முகமத் கைஃப்: தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபடும் விராட் கோலியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. விராட் கோலி ஆடுவதை பார்க்கும்போது மற்ற சிறந்த ஆட்டக்காரர் சாதாரணமாகத் தெரிவார். கோலி சதம் அடிப்பதை பார்க்கும்போது எவ்வளவு மகிழச்சியாக உள்ளது. அவருடைய சதங்களில் சிறந்த ஒன்று.
டேவிட் வார்னர்: கோலி வித்தியாசமானவர். என்ன ஒரு வீரர்.
சச்சின்: மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள். இன்னும் அதிஅதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துகள்
கங்குலி: வாழ்த்துகள்... அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது.
விவிஎஸ். லஷ்மண்: நான் பார்த்த ஒரு நாள் சதங்களில் சிறந்த ஒன்று. பக்குவமாகவும் பொறுப்புணர்ந்து விளையாடினார். குறிப்பாக ஒரு அணி அழுத்ததில் இருக்கும்போது.
முரளி விஜய்: என்ன ஒரு சிறந்த ஆட்டம். இன்று நீங்கள் விளையாடியதைப் பார்த்தது விருந்தாக இருந்தது.
கருண் நாயர்: உங்களது ஒவ்வொரு இன்னிங்கிஸ்ஸும் கவரும் வகையில் உள்ளது. எப்போது முன்னின்று அணியை வழி நடத்துக்கிறீர்கள்.
இவ்வாறு பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தனர்.