Published : 01 Feb 2018 07:01 PM
Last Updated : 01 Feb 2018 07:01 PM

கடல் மட்டத்துக்கும் கீழே குனிவார் போலிருக்கிறதே: கேதார் ஜாதவ் பவுலிங் ஆக்‌ஷன் குறித்து கவாஸ்கர் ருசிகரம்

டர்பன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் சோதனைகளைக் கொடுத்து வருகின்றனர்.

அந்த அணி சற்று முன் வரை 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் இருந்த ரன் விகிதம் ஓவருக்கு 4.41 ஆகக் குறைந்து விட்டது. நன்றி, இந்திய ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல், ஜாதவ். கேதார் ஜாதவ் 3 ஓவர்களில் 19 ரன்களைக் கொடுத்தார், இவரை தென் ஆப்பிரிக்கா நினைக்கும் அளவுக்கு அடித்து ஆட முடியவில்லை.

அவர் வலது கையை நன்றாக தன்னிலிருந்து விலகி ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு விதமாக வீசுகிறார், நன்றாக நிமிர்ந்து வீசுகிறார், சாதாரண நிலையில் விசுகிறார், சில பந்துகளை நன்றாகக் குனிந்து வீசுகிறார்.

இதை வர்ணனை அறையில் இருந்த சுனில் கவாஸ்கர், ‘ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கிரிக்கெட் வீரர் ஜாதவ்’ என்று வர்ணித்ததோடு,  அவரது பந்து வீச்சு பாணி குறித்து "Below sea level?" அதாவது எவ்வளவு குனிவார் அவர், கடல் மட்டத்துக்கும் கீழா என்று சுனில் கவாஸ்கர் சிரித்தபடியே வர்ணித்தது ருசிகரமாக அமைந்தது.

கேப்டன் டுபிளெசிஸ் 64 ரன்களுடனும் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணியில் சாஹல், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பும்ரா ஆம்லாவை எல்.பி.ஆக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x