Published : 07 Mar 2024 06:59 AM
Last Updated : 07 Mar 2024 06:59 AM

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் | 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

கோப்புப்படம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 14-ம் நிலை வீரரான சீன தைபேவின் சவு டியன் செனை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாய் 17-21,17-21 என்ற நேர் செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான சீனாவின் லு குவாங் சூ-விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 17-ம் நிலை வீராங்கனையான கனடாவின் மிட்செல்லியுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x