Published : 07 Mar 2024 07:17 AM
Last Updated : 07 Mar 2024 07:17 AM
பிராக்: செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா - டி.குகேஷ் ஆகியோர் நேருக்கு நேர் மோதினார்கள்.
இந்த ஆட்டம் 91-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 37-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர், தவறான நகர்த்தலை மேற்கொண்டதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.
7 சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவ் 5புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, செக்குடியரசின் நுயென் தான் டாய் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
செக்குடியரசின் டேவிட் நவரா, ருமேனியாவின் ரிச்சர்ட் ராப்போர்ட் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளையும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்தியாவின் டி.குகேஷ் ஆகியோர் தலா 3 புள்ளிகளையும், போலந்தின் மாட்யூஸ் பார்டெல் 2.5 புள்ளிகளையும், இந்தியாவின் விதித் குஜராத்தி 2 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT