ISPL T10 | சுரேஷ் ரெய்னாவுடன் சூர்யா உற்சாக போஸ்!

ISPL T10 | சுரேஷ் ரெய்னாவுடன் சூர்யா உற்சாக போஸ்!
Updated on
1 min read

தானே: முதலாவது ஐஎஸ்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் புதன்கிழமை (மார்ச் 6) தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் சென்னை சிங்கம்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான சூர்யா, முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் போட்டோவுக்கு உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார். அது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இது 10 ஓவர்களை கொண்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடராகும். இந்த ஐஎஸ்பிஎல் டி10 தொடரின் முதல் சீசன் மார்ச் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 18 போட்டிகள் விளையாடப்படுகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் விளையாடுகின்றன. இந்திய சினிமா பிரபலங்கள் இந்த அணிகளை வாங்கி உள்ளனர்.

இதன் தொடக்க விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகரில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்களான சினிமா பிரபலங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் பங்கேற்றனர். அப்போது ரெய்னாவை சூர்யா சந்தித்துள்ளார். தொடர்ந்து தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in