Published : 04 Mar 2024 08:10 AM
Last Updated : 04 Mar 2024 08:10 AM

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டி: ஷர்துல் சதத்தால் மும்பை முன்னிலை

ஷர்துல் தாக்குர்

மும்பை: தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் cரின் அபார சதத்தால் அந்த அணி 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தமிழகம் 146 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் மும்பை அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது மும்பை அணி. முஷீர்கான் 55, மோஹி அவஸ்தி 2, அஜிங்கியரஹானே 19, ஸ்ரேயஸ் ஐயர் 3, ஷாம்ஸ் முலானி 0, ஹர்திக் தாமோர் 35 ரன்களில் வீழ்ந்தனர். ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்குரும், தனுஷ் கோட்டியனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.

தாக்குர் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 104 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆட்ட நேர இறுதியில் மும்பை அணி 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் சேர்த்து 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தனுஷ் கோட்டியன் 74, துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 6, குல்தீப் சென் 2, சந்தீப் வாரியர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 207 ரன்கள் முன்னிலையுடன் இன்று 3-ம் நாள் ஆட்டத்தை விளையாடுகிறது மும்பை அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x