

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை மிக அற்புதமான கேப்டன் என குறிப்பிட்டுள்ளார் இந்திய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் வீரரான பங்கஜ் அத்வானி.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் படுதோல்வி கண்டதால் இந்திய அணியும், தோனியும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் அத்வானி மேலும் கூறியிருப்பதாவது:
தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி மட்டுமே கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர். இங்கிலாந்துக்கு எதிராக தோற்றுள்ளதால் அவருடைய கேப்டன்ஷிப் குறித்து மக்கள் கேள்வியெழுப்புவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் சரிவிலிருந்து மீண்டு வரும் ஆற்றல் அவருக்கு மட்டுமே உள்ளது. இந்தியா போன்ற அணிக்கு தலைமை வகிக்கக்கூடிய முதிர்ச்சி அவரிடம்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.