தோனி, கோலிக்கு பத்ம விருது பிசிசிஐ பரிந்துரை

தோனி, கோலிக்கு பத்ம விருது பிசிசிஐ பரிந்துரை
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரை பத்ம பூஷண் விருதுக்கும், துணை கேப்டன் விராட் கோலி பெயரை பத்ம ஸ்ரீ விருதுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் பெயரும் பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் பிசிசிஐ இந்த பரிந்துரையை அளித்துள்ளது.

தோனிக்கு பத்ம பூஷண் விருது கிடைத்தால், பத்ம பூஷண் விருதைப் பெறும் 10-வது கிரிக்கெட் வீரராக அவர் இருப்பார். இதற்கு முன்பு பிஷண் சிங் பேடி, பரூக் இன்ஜினீயர், குண்டப்பா விஸ்வநாத், லாலா அமர்நாத், கவாஸ்கர், கபில்தேவ், திராவிட், கங்குலி, சச்சின், கும்ப்ளே உள்ளிட்டோர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்.

தோனிக்கு ஏற்கெனவே 2009-ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. தோனி தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் தோனி தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. ஐசிசி நடத்தும் முக்கிய போட்டிகள் அனைத்திலும் தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியனாகியுள்ளது.

எனினும் இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரு டெஸ்ட்களில் தோல்வியடைந்து கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in