Last Updated : 15 Feb, 2018 07:50 PM

 

Published : 15 Feb 2018 07:50 PM
Last Updated : 15 Feb 2018 07:50 PM

‘அஸ்வின், ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற போராட வேண்டும் என்று யாரேனும் எதிர்பார்த்திருப்பார்களா?’

 

சமீப காலங்களாக உள்நாட்டில் கலக்கி வந்த இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சாஹல், குல்தீப் யாதவ் ஜோடி தென் ஆப்பிரிக்காவிலும் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்து 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் நுழைய அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பேயில்லை என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அடுல் வாசன் தெரிவித்துள்ளார்.

“இடக்கரடக்கலாக சிலர் கூறுவர் அஸ்வின், ஜடேஜாவுக்கு உலகக்கோப்பை இந்திய அணியில் வாய்ப்புள்ளது என்று ஆனால் உண்மையில் வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். குல்தீப், சாஹல் இருவரில் ஒருவர் காயமடைந்தால்தான் வாய்ப்பு.

இந்திய பந்து வீச்சின் மிகப்பெரிய பலமான சுழற்பந்து வீச்சை அன்னிய சூழ்நிலைமைகளிலும் பரிமளிக்க வாய்ப்பளித்து சாஹல், குல்தீப்புக்கு  முழுச் சுதந்திரம் அளித்த விராட் கோலி பாராட்டுக்குரியவர். இவர்களுக்கு மிகப்பெரிய இதயம்.... காரணம் பந்தை மெதுவாகத் தூக்கி வீச தைரியம் வேண்டும். அடிவாங்கினாலும் இவர்கள் கவலைப்படுவதில்லை.

ஓராண்டுக்கு முன்பாக அஸ்வின், ஜடேஜா இந்திய அணியில் தங்கள் இடத்துக்காக போராட வேண்டும் என்று ஒருவரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இதுதான் ஆரோக்கியமான போட்டி” என்றார் அடுல் வாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x