Published : 21 Feb 2024 08:13 AM
Last Updated : 21 Feb 2024 08:13 AM
துபாய்: துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாயில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலைவீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார். இதில் டோனா வெகிக்6-7 (5), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் அரினா சபலெங்காவை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-1, 5-7, 6-2 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT