Published : 14 Feb 2018 02:58 PM
Last Updated : 14 Feb 2018 02:58 PM

தென் ஆப்பிரிக்காவின் மோசமான உள்நாட்டு தோல்வி: சில புள்ளி விவரங்கள்

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்கா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவி ஒருநாள் தொடரை இந்திய அணியிடம் உள்நாட்டில் முதல் முறையாக 1-4 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இது தென் ஆப்பிரிக்கா உள்நாட்டில் பெற்ற மோசமான ஒருநாள் தொடர் தோல்வி என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சுமார் 25 இருதரப்பு ஒருநாள் தொடர்களில், அதாவது 5 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட 25 ஒருநாள் தொடர்களை, தென் ஆப்பிரிக்கா உள்நாட்டில் ஆடியுள்ளது, தொடரை இழப்பது இதுவே 3-வது முறையாகும். 1996-97, மற்றும் 2001-02 என்று இருமுறையும் ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்த பிறகு தற்போது இந்திய அணியிடம் தொடரை இழந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

1996-97-ல் 3-4 என்றும் 2001-02-ல் 1-5 என்றும் ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது.

எந்த வகையில் மோசமான தொடர் என்றால் பேட்டிங்கில் தென் ஆப்ரிக்காவின் சராசரி 22.65, பவுலிங்கில் 50.20 இது மிக மோசமான சராசரி என்ற அளவில் இது மோசமான தொடர் தோல்வியாகும்.

இந்திய அணியின் டாப் ஆர்டர், குறிப்பாக ஷிகர் தவண், கோலி, பிறகு நேற்று ரோஹித் சர்மா ஆதிக்கம் செலுத்த, பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் தென் ஆப்பிரிக்காவை காலி செய்தனர் என்றே கூற வேண்டும். கோலி எடுத்த 160 ரன்கள் ஆல் டைம் கிரேட் ஒருநாள் இன்னிங்ஸாக வர்ணிக்கப்பட வேண்டியதாகும்.

இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் 16 விக்கெட்டுகளையும் சாஹல் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 4வது போட்டியில் மட்டும் குறைந்த ஓவர் போட்டி என்பதால் தென் ஆப்பிரிக்கா இவர்களை வெளுத்து வாங்கியது. மற்றபடி இன்னமும் கூட இவர்கள் என்ன வீசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

எந்த ஒரு இருதரப்பு தொடர்களிலும் இரண்டு ஸ்பின்னர்கள் 30 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக எடுத்ததில்லை.

ஆதாரம்: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x