கோலி ஒரு ஜீனியஸ்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட் புகழாரம்

கோலி ஒரு ஜீனியஸ்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட் புகழாரம்
Updated on
1 min read

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 'ஜீனியஸ்' எனப் புகழ்ந்துள்ளார்.

பாக்பேசன்.நெட் (Pakpassion.net) என்ற இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர், "இந்திய பேட்ஸ்மேன்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமும் அவர்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்குக் காரணமும் அவர்களது பேட்டிங் நுட்பம் சரியாக இருப்பதே.

கோலியைப் பொறுத்தவரை அவரது பேட்டிங் முறையே அவருக்கு ரன்களை சேர்த்துத் தருகிறது. ஒருமுறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் பேட் செய்ய வரும்போதும் அந்த நுட்பம் அவருக்கு ரன்களை சேர்த்துத் தருகிறது.

ஒரு பேட்ஸ்மேனின் பேட்டிங் நுட்பம் சரியாக இல்லை என்றால் அவர் எப்போதாவது மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். சீராக ரன் எடுக்கும் வீரராக இருக்க முடியும். கோலியைப் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான அடையாளம், அவர் பவுலர்களின் திறமைகளையும் சறுக்கல்களையும் சரியாக கணித்துக் கொண்டு அதற்கேற்ப தனது பேட்டிங் முறையை மாற்றி அமைப்பதே. சர்வதேச அளவில் கோலியே சிறந்த பேட்ஸ்மேன். கோலி ஒரு ஜீனியஸ்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "இந்திய வீரர்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையேயான வித்தியாசம் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதில் இருந்தே வெளிப்பட்டுவிட்டது.

இருப்பினும், பாகிஸ்தான் வீரர்களை அதிகமாகக் கடிந்து கொண்வதும் நியாயமாக இருக்காது.

தொழில் உத்திகள் ரீதியாக இரு அணிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2 போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தியதையும் மறந்துவிடக் கூடாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in