

காமன்வெல்த் போட்டியின் ஜிம்னாஸ்டிக் ஆடவர் வால்ட் இறுதிச்சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்தார் இந்தியாவின் ஆசிஷ் குமார்.
இந்தப் பிரிவில் கனடாவின் ஸ்காட் மோர்கன் தங்கப் பதக்கத்தையும், இங்கிலாந்தின் கிறிஸ்டியன் தாமஸ் வெள்ளிப் பதக்கத்தையும், சிங்கப்பூரின் டூன் வாஹ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கடந்த காமன்வெல்த் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களை வென்று காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ஆசிஷ் குமார் இந்த முறை வெறுங்கையோடு திரும்பியது ஏமாற்றமாக அமைந்தது.