Published : 05 Feb 2024 08:24 AM
Last Updated : 05 Feb 2024 08:24 AM

டேவிஸ் கோப்பை டென்னிஸ் | பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

இஸ்லாமாபாத்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளேஆப் சுற்றுப் போட்டியில் இந்தியா,பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாட சென்றுள்ளது. இதனால் இந்த போட்டி மீது இந்திய ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு கடைசியாக 1964-ல் பாகிஸ்தான் சென்ற இந்திய டென்னிஸ் அணி, அப்போது 4-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய குரூப் 1 பிளேஆப் சுற்றுப் போட்டியில் 2 ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன், என்.ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் குரூப் சுற்றில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, பாகிஸ்தானின் முசாமில் முர்டாஸா, அகீல் கான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி,சாகேத் மைனேனி ஜோடி 6-2 7-6(5) என்ற கணக்கில் முசாமில் முர்டாஸா, அகீல் கான் ஜோடியை வீழ்த்தியது. இதனால் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் நிக்கி பூனாச்சா 6-3 6-4 பாகிஸ்தான் வீரர் முகமது ஷோயிபை தோற்கடித்தார். இதன் மூலம் குரூப்-1 பிளே ஆப் சுற்றில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x