தவால் குல்கர்னியை உடனே அணியில் தேர்வு செய்ய வேண்டும்: வெங்சர்க்கார்

தவால் குல்கர்னியை உடனே அணியில் தேர்வு செய்ய வேண்டும்: வெங்சர்க்கார்
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

இஷாந்த் சர்மா காயத்தினால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது. மேலும், பவனேஷ் குமார் விளையாடுவதும் சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

"தவால் குல்கர்னி இந்தியா ஏ அணிக்காக ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக வீசியுள்ளார். அவர் பந்தின் தையலைப் பிட்ச் செய்து பந்தை எழுப்பி ஸ்விங் செய்யும் வீச்சாளர். இங்கிலாந்து பிட்ச்களுக்கு ஏற்ற பவுலர் அவர். மேலும் அவர் நல்ல ஃபார்மில் உள்ளார்.

எனவே அவரை உடனடியாக அணியில் தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார் திலிப் வெங்சர்க்கார்.

சமீபத்தில் முடிந்த நாற்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா ஏ சாம்பியன் ஆனது. இந்தத் தொடரில் தவால் குல்கர்னி 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 58 ஆட்டங்களில் 181 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in