Published : 25 Feb 2018 06:57 PM
Last Updated : 25 Feb 2018 06:57 PM

சங்கக்காரா, மிஸ்பா, அப்ரீடி, மலிங்கா வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா

முதுகுவலி காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்பதால் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா கேப்டன்சியில் தானும் சளைத்தவரல்ல என்பதை அறிவுறுத்தும் விதமாக சிறு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ரோஹித் சர்மா கேப்டனாக 4வது டி20 போட்டியில் வென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஷாகித் அஃப்ரீடி, சர்பராஸ் அகமட், இலங்கையின் குமார் சங்கக்காரா, லஷித் மலிங்கா ஆகியோர் தங்களது கேப்டன்சியில் முதல் 4 டி20 போட்டிகளில் வென்றுள்ளனர்.

தற்போது ரோஹித் சர்மாவும் இந்தப் பட்டியலில் 6வது கேப்டனாக இணைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ்டியன் ஜோங்கர், பெஹார்டீன் இறங்கி கிட்டத்தட்ட 53 ரன்களை வெகுவிரைவில் எடுத்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் பதற்றமில்லாமல் அருமையாக வீசி இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

டிசம்பர் 2017-ல் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக முதல் முறையாக இந்திய அணியின் டி20 கேப்டனானார், அப்போது இலங்கை அணிக்கு 3-0 ஒயிட் வாஷ் கொடுக்கப்பட்டது. இப்போது ஒரே போட்டியில் தன் கேப்டன்சியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x