

காமன்வெல்த் பாட்மிண்டன் ஆட்டவர் ஒற்றைய போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில், 32 ஆண்டு கால காமன்வெல்த் வரலாற்றில், தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் காஷ்யப்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், சிங்கப்பூரின் டெரீக் வாங்கை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில், காஷ்யப் 21-14, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். இது, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற 15-வது தங்கப்பதக்கம் ஆகும்.
இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான குருசாய்தத் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அதேவேளையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்.