கேலோ இந்தியா கோ-கோ விளையாட்டு போட்டி: மகாராஷ்டிரா அணிக்கு தங்கப் பதக்கம்

கோகோவில் தங்கப்பதக்கம் வென்ற மகாராஷ்டிரா மகளிர் அணியினர்.
கோகோவில் தங்கப்பதக்கம் வென்ற மகாராஷ்டிரா மகளிர் அணியினர்.
Updated on
1 min read

மதுரை: தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில், ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணிகள் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளன.

இளைஞர் கோ-கோ விளை யாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் ஜன.26-ல் தொடங்கியது. நேற்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் பிரிவில், மகாராஷ்டிரா, ஒடிசா அணிகள் மோதின. மகாராஷ்டிரா அணி 6 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. ஒடிசா அணி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. தொடர்ந்து, டெல்லி மற்றும் குஜராத் அணிகள் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றன.

இதேபோல், ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் மகாராஷ்டிரா அணி 10 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. இரண்டாம் இடம் பிடித்த டெல்லி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. குஜராத் மற்றும் கர்நாடகா அணிகள் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றன. பெண்கள் பிரிவில் வென்றவர் களுக்கு, இந்திய கோ-கோ கூட் டமைப்பு பொதுச் செயலாளர் எம்.எஸ்.தியாகி, இந்திய விளையாட்டு ஆணைய உதவி இயக்குநர் சுமேத் தாரோடேகர் பரிசுகளை வழங்கினர்.

வெற்றிபெற்ற ஆண்கள் அணிக்கு, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வருவாய் அலுவலர் ஆர்.சக்தி வேல் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையை கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா வழங்கினார். இதில், மதுரை மண்டல மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்கள் க.ராஜா, ஆ.முருகன், சி.ரமேஷ் கண்ணன், தினேஷ் குமார் ஆகியோர் பங் கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து செய்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in