Published : 26 Jan 2024 07:32 AM
Last Updated : 26 Jan 2024 07:32 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலெங்கா, சீனாவின் கின்வென் ஜெங் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதினார். இதில் அரினா சபலெங்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் 15-ம் நிலை வீராங்கனையான சீனாவின் கின்வென் ஜெங், 93-ம் நிலை வீராங்கனையான தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவுடன் மோதினார். இதில் கின்வென் ஜெங் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அரினா சபலெங்கா - கின்வென் ஜெங் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT