Published : 25 Jan 2024 07:22 AM
Last Updated : 25 Jan 2024 07:22 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி

கோப்புப்படம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-6(7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸை வீழ்த்தினார். இதன் மூலம் மேத்வதேவ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 6-3, 6-4 என்ற நேர் செட்டில், செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்திஅரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 15ம் நிலை வீராங்கனையான சீனாவின் குயின்வென்ஜெங், 75ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா கலின்ஸ்காயாவுடன் மோதினார். இதில் குயின் ஜெங் 6-7(4-7), 6-3, 6-1 என்றசெட் கணக்கில் வெற்றி பெற்றுஅரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்ஜோடி 6-4, 7-6(7-5) என்ற நேர் செட்கணக்கில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ், ஆண் ட்ரெஸ்மோல்டெனி ஜோடியை வீழ்த்திஅரை இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x