Published : 05 Feb 2018 03:32 PM
Last Updated : 05 Feb 2018 03:32 PM

வெற்றி பெற 2 ரன்கள் இருக்கும் போது ‘கேலிக்கூத்து’: உணவு இடைவேளை குறித்த கேலிகள்!

ஞாயிறன்று நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் 118 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வெற்றி பெற ரன்களே தேவை என்ற நிலையில் திடீரென உணவு இடைவேளையை நடுவர்கள் அறிவித்தது புதிய சர்ச்சையைக் கிளப்பியது.

களநடுவர்களான அலீம்தார் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராப்ட் ஆகியோரை டிவி வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஐசிசி விதிமுறைகளின் படியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய கேலிக்கூத்து என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

முறையான உணவு இடைவேளை நேரத்தில் இந்திய அணி 15 ஓவர்களில் 93/1 என்று வலுவான நிலையில் இருந்தது. இதனையடுத்து நடுவர்கள் 15 நிமிடங்கள் கூடுதல் நீட்டிப்பு செய்தனர், அந்த 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 117/1 என்று வெற்றிக்கு 2 ரன்களே தேவை என்ற நிலையில் இருந்தது.

அப்போதுதான் கோலியின் கடுப்பாகும் விதமாக நடுவர்கள் உணவு இடைவேளைக்குச் செல்வோம் என்று அறிவித்தனர். மைதானத்தில் ரசிகர்கள் கிளம்பத் தொடங்கினர். ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது மைதானத்தில் ரசிகர்கள் ஏறக்குறைய இல்லை எனறு கூற வேண்டும்.

வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் கூறும்போது, “கிரிக்கெட்டை இன்னும் விறுவிறுப்பாக்க முயன்றனர், ஆனால் இது முட்டாள்தனமானது.

சேவாக்: “இந்திய பேட்ஸ்மென்களை நடுவர்கள் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களை நடத்துவது போல் நடத்தினர், ‘லஞ்ச் கே பாத் ஆனா’ (உணவு இடைவேளைக்குப் பிறகு வாருங்கள்).

மைக்கேல் வான்: கிரிக்கெட்டின் பைத்தியக்காரர்கள். வெற்றிக்கு 2 ரன்கள் இருக்கும் போது உணவு இடைவேளை, கொஞ்சம் அறிவுடன் செயல்பட வேண்டும்.

ஆகாஷ் சோப்ரா: ஆர் யு சீரியஸ்? வெற்றிக்கு இந்தியாவுக்கு 2 ரன்கள் இருக்கும் போது உணவு இடைவேளையா. கிரிக்கெட்டுக்கு அதுவே விரோதி.

பிர்தூஸ் மூண்டா (தெ.ஆ.) நன்றாக சாப்பிட்டு விட்டு வந்த தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் கிட்டத்தட்ட ரசிகர்களே இல்லாத நிலையில் 0-2 என்று தோற்றனர். குறைந்தது, அனைவரும் உணவாவது எடுத்துக் கொண்டனரே.

3-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x