Last Updated : 26 Feb, 2018 08:03 PM

 

Published : 26 Feb 2018 08:03 PM
Last Updated : 26 Feb 2018 08:03 PM

ஆஸி. தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறார் மோர்னி மோர்கெல்

நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்கெல் அறிவித்துள்ளார்.

“மிகவும் கடினமான முடிவு, ஆனால் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க இதுவே சிறந்த தருணம் என்று நினைக்கிறேன். எனக்கு இளம் குடும்பம், அயல்நாட்டு மனைவி, தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நெருக்கமாக அமைக்கப்படுவதால் அழுத்தம் அதிகரித்துள்ளது, எனவே குடும்பத்தை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னிடம் பங்களிப்பு செய்ய இன்னமும் நிறைய இருக்கிறது என்றே கருதுகிறேன். ஆனால் எதிர்காலத்தில் எனக்காகக் காத்திருக்கும் விஷயங்கள் எனக்கு உற்சாகமூட்டுகின்றன. இப்போதைக்கு எனது ஆற்றலும் கவனமும் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறச் செய்வதுதான்” என்றார்.

தென் ஆப்பிரிக்க வீரர்களை இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்குப் பிடித்துப் போடும் கோல்பாக் ஒப்பந்தத்தில் மோர்னி மோர்கெல் பெயர் அடிபட்டது. கைல் அபாட் உள்ளிட்ட அபாரமான வீரர்கள் இங்கிலாந்து கவுண்ட்டிக்கு ஆடிவருகின்றனர். இதற்கு பணம் ஒரு பிரதான காரணம், 2வது தென் ஆப்பிரிக்க அணி கறுப்பின வீர்ர்களை மெல்ல உள்ளே கொண்டு வரும் affirmative justice கொள்கையில் செயல்பட்டு வருவதும் மற்றொரு காரணம்.

ஆனால் கோல்பாக் ஒப்பந்தத்தில் உண்மையில்லை என்று மோர்னி மோர்கெல் தெரிவித்திருந்தார்.

2006-ல் டெஸ்ட் அறிமுகமான மோர்னி மோர்கெல் அப்போதிலிருந்தே தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து திறனில் முக்கிய அங்கம் வகித்தார். 2009-ல் மகாயா நிடினி ஓய்வு பெற்ற பிறகு டேல் ஸ்டெய்னின் உறுதுணையாகச் செயலாற்றினார். ஸ்டெய்ன், வெர்னன் பிலாந்தர் இல்லாத நிலையில் பந்து வீச்சை வழிநடத்தவும் செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2015 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீச்சாளராக இருந்தார் மோர்னி மோர்கெல்.

அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் ஒரு கட்டத்தில் டாப் 10 வீச்சாளராக இருந்தார். 2011-ல் சிறிது காலத்துக்கு ஒருநாள் கிரிக்கெட் நம்பர் 1 பவுலராக இருந்தார் மோர்கெல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x