இந்தியா ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதியில் ஹெச்.எஸ்.பிரணாய்

இந்தியா ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதியில் ஹெச்.எஸ்.பிரணாய்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் சக நாட்டைச் சேர்ந்த பிரியன்ஷு ரஜவத்துடன் மோதினார். இதில் ஹெச்.எஸ்.பிரணாய் 20 - 22, 21 -14, 21 -14 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இந்த ஆட்டம் ஒருமணிநேரம் 16 நிமிடங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஹெச்.எஸ்.பிரணாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியும் கால் இறுதி சுற்றில் கால் பதித்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in