Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

இன்றுடன் நிறைவடைகிறது காமன்வெல்த்

20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வண்ணமிகு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இன்றோடு நிறைவடைகிறது.

கடைசி நாளான இன்று பாட்மிண்டனில் 5 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் உள்பட மொத்தம் 11 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகளும், 4 வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகளும் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பிரபல பாப் பாடகி கெய்லி மினோக் கலந்துகொண்டு நடனமாடுகிறார். 2,000 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

நிறைவு விழாவுக்காக கிளாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஹேம்ப்டன் பார்க்கில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x