சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்: ரோகித் சர்மா 2-ம் இடம்!

ரோகித் சர்மா
ரோகித் சர்மா
Updated on
1 min read

இந்தூர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார். அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் தற்போது அவர் உள்ளார்.

36 வயதான ரோகித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 150 டி20 போட்டிகளில் விளையாடி 3,853 ரன்கள் குவித்துள்ளார். 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் இதில் அடங்கும். அதிக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் 12 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆகியுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்

  • ஸ்டிர்லிங் - 13 முறை (அயர்லாந்து)
  • ரோகித் சர்மா - 12 முறை (இந்தியா)
  • ஓ'பிரைன் - 12 முறை (அயர்லாந்து)
  • டேனியல் அனெஃபி - 11 முறை (கானா)
  • ஸேப்பி - 11 முறை (ரூவாண்டா)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in