

அல் ரய்யான்: ஆடவருக்கான ஏஃஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அல் ரய்யான் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் 50-வது நிமிடத்தில் ஜேக்ஸன் இர்வின், 73-வது நிமிடத்தில் ஜோர்டான் புரோஸ் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.