இந்திய அணியில் மாற்றங்கள் தேவை: கங்குலி

இந்திய அணியில் மாற்றங்கள் தேவை: கங்குலி
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததையடுத்து அணியில் சில மாற்றங்கள் செய்வது அவசியம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

'இங்கிலாந்து பிட்சில் ஸ்பின்னர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார் என்றால் அது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

பேட்டிங் வரிசையில் புதிய யோசனைகள் தேவை, தவானுக்கு ஓய்வு அளித்து கம்பிரை களமிறக்க வேண்டும். எனக்கு கோலி பற்றி அதிக கவலை இல்லை, ஆனால் தவான் ஆட்டம் கவலையளிப்பதாக உள்ளது.

உமேஷ் யாதவை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும், வருண் ஆரோன் இங்கு பந்து வீசி அனுபவம் இல்லாதவர் இருந்தாலும் நல்ல வேகத்தில் வீசக்கூடிய அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். திடீரென அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும், நாம் ஒன்றும் முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி பலவீனமாகவே உள்ளது, ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அவர்களை வீழ்த்த முடியும்.’ இவ்வாறு கூறியுள்ளார் கங்குலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in