Published : 09 Jan 2024 06:58 AM
Last Updated : 09 Jan 2024 06:58 AM
பர்மிங்காம்: இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் நாடியன் எல்ஹம்மாமியுடன் மோதினார். இதில் அனாஹத் சிங் 11-7, 11-13, 10-12, 11-5, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 2-வது இடம் பெற்றார். இந்த ஆட்டம் 68 நிமிடங்கள் நடைபெற்றது.
7 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆர்யவீர் திவான் 3-வது இடம் பிடித்தார். அரை இறுதி ஆட்டத்தில் ஆர்யவீர் திவான் 1-3 என்ற கணக்கில் எகிப்தின் ஃபிலோபேட்டர் சலேவிடம் தோல்வி அடைந்தார். ஆனால் 3-வது இடத்துக்கான பிளே ஆஃப் ஆட்டத்தில் ஆர்யவீர் திவான் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT