Published : 07 Jan 2024 06:49 AM
Last Updated : 07 Jan 2024 06:49 AM

அர்ஜூன் தேஷ்வால் அசத்தல் ரெய்டில் யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

மும்பை: புரோ கபடி லீக்கின் 10-வது சீசனில்நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் யு மும்பா வீரர்குமான் சிங் முதல் ரெய்டிலேயே ஜெய்ப்பூர் வீரர்கள் ரேசா மிர்பாகேரி, சுனில் குமார் ஆகியோரை வெளியேற்றி 2 புள்ளிகளுடன் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். ஆனால் இதன் பின்னர் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் நட்சத்திர ரெய்டரான அர்ஜூன் தேஷ்வால் சீரான இடைவெளியில் 6 புள்ளிகளை குவித்தார். அதேவேளையில் பவானி ராஜ்புத் 3 புள்ளிகளை சேர்க்க முதல் 10 நிமிடத்தில் யு மும்பா அணியை ஆல் அவுட் செய்து அசத்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. இதனால் அந்த அணி 14-6 என முன்னிலை பெற்றது.

இதன் பின்னர் அர்ஜூன் தேஷ்வாலை, யு மும்பா அணியின் டிபன்டர் மகேந்தர் சிங் டேக்கிள் செய்தார். தொடர்ந்து குமான் சிங் ரெய்டில் ஒரு புள்ளி சேர்த்தார். ஆனால் டூ ஆர் டை ரெய்டை அஜித் குமார் சூப்பர் ரெய்டாக மாற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 17-8 என முன்னிலை பெற்றது.

இதன் பின்னர் குமான் சிங், யு மும்பா அணிக்காக தனது அடுத்தடுத்த ரெய்டில் 2 புள்ளிகள் சேர்த்தார். ஆனால் மறுபுறம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் டிபன்ஸிலும் அசத்த முதல் பாதி ஆட்டத்தில்22-12 என வலுவான முன்னிலையை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் ஆதிக்கம் தொடர்ந்தது.

இதனால் யு மும்பா அணி 2-வதுமுறையாக ஆல் அவுட் ஆனது. இதன் பின்னர் யு மும்பா அணிசற்று எழுச்சி கண்டது. ஆனால் அந்த அணியால் 10 புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை. மாறாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தொடர்ச்சியாக புள்ளிகளை குவிக்க முடிவில் 41-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு இது 6வது வெற்றியாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x