ஓசியானா ரெனி தாமஸ் தங்கம் வென்று சாதனை!

ஓசியானா ரெனி தாமஸ்
ஓசியானா ரெனி தாமஸ்
Updated on
1 min read

இந்துஜூனியர் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த டிசம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மகளிருக்கான பேலன்ஸிங் பீம் பிரிவில் சென்னையை சேர்ந்த ஓசியானா ரெனி தாமஸ் 10.733 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஜூனியர் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஓசியானா ரெனி தாமஸ்.மேலும் ஃப்ளோர் எக்ஸர்சைஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினார் ஓசியானா ரெனி தாமஸ். முதன்முறையாக இரு பதக்கங்கள் வென்று சாதனை படைத்த அவருக்கு தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.பாலா, பொருளாளர் ஷரோன் சுவாரெஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in