சிந்துவுக்கு வெண்கலம் உறுதி

சிந்துவுக்கு வெண்கலம் உறுதி
Updated on
1 min read

உலக பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பி.வி.சிந்து 19 -21, 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா தனது காலிறுதியில் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் லீ ஸியூரூயிடம் தோல்வி கண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in