இளையோர் செஸ் போட்டியில் தங்கம் வென்றார் ஷர்வானிகா

இளையோர் செஸ் போட்டியில் தங்கம் வென்றார் ஷர்வானிகா
Updated on
1 min read

சென்னை: ஆசிய இளையோர் செஸ் போட்டியில் ஷர்வானிகா தங்கப் பதக்கம் வென்றாார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஐன் நகரில் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து நடத்திய இந்த தொடரில் 21 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், ஹட்சன் செஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 8 வயது மாணவியான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த ஷர்வானிகா, யு-8 கிளாசிக்கல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், யு-8 ரேபிட் பிரவு மற்றும் யு-8 பிளிட்ஸ் பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in