Published : 26 Dec 2023 08:00 AM
Last Updated : 26 Dec 2023 08:00 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணிகைப் பற்றி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கு பின்னர், சர்வதேச டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்திசர்மா, யாஷ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயன்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்குர், டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ராகர், ஸ்னே ராணா. ஹார்லின் தியோல்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா,யாஷ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயன்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்குர், டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ராகர், கனிகா, மின்னு மணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT