ஆஸி.யுடன் டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் வீரர் நோமனுக்கு பதிலாக முகமது நவாஸ் சேர்ப்பு

ஆஸி.யுடன் டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் வீரர் நோமனுக்கு பதிலாக முகமது நவாஸ் சேர்ப்பு
Updated on
1 min read

மெல்பர்ன்: காயம், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 26) மெல்பர்னில் தொடங்குகிறது. இது பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி விலகியுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் காயம் காரணமாக விலகிய நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நோமன் அலியும் இணைந்துள்ளார்.

இது தொடர்பான தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு மெல்பர்ன் நகருக்குச் சென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in