T20 WC 2024 | இங்கிலாந்து டி20 அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!

T20 WC 2024 | இங்கிலாந்து டி20 அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாவது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரது அனுபவத்தை இங்கிலாந்து அணி பெற உள்ளது. குறிப்பாக அங்கு நிலவும் கள சூழலை அறிய அவர் உதவுவார் என தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 123 ஒருநாள் மற்றும் 101 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2012-ல் டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் அங்கம் வகித்தவர். சுமார் 600-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். அதிரடி பேட்ஸ்மேன், விக்கெட் வீழ்த்தும் பவுலர், அபார ஃபீல்டராக இயங்கியவர் பொல்லார்ட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in